தமிழ்நாடு

ஜனவரி 1 முதல் வாட்டர் கேன் விலை உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி

Published

on

ஜனவரி 1-ஆம் தேதி முதல் வாட்டர் கேன் விலை உயர போவதாக வாட்டர் கேன் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உள்பட பெருநகரங்களிலும், பல சிறு நகரங்களிலும் தற்போது குடிநீர் தேவையை வாட்டர் கேன் தான் பூர்த்தி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் வாட்டர் கேன் விலை மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக வாட்டர் கேன் விலை உயர்த்தப்படுவதாக வாட்டர் கேன் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

300 மில்லி, 500 மில்லி, ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் மற்றும் 5 லிட்டர் பாக்ஸ்கள் மீது ஜனவரி 1 முதல் ரூபாய் பத்து உயர்த்தப்படும் என்றும், 20 லிட்டர் கேன் ரூபாய் 2 உயர்த்தப்படும் என்றும் வாட்டர் கேன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஒரு பெட்டி ஒன்றுக்குத்தான் ரூ.10 உயர்த்தபடுவதாகவும் வியாபாரிகள் பொது மக்களிடம் அதிக விலை சுமையை ஏற்படுத்தி விடக்கூடாது என்றும் வாட்டர் கேன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு பெட்டி ஒன்றின் வாட்டர் கேன் விலை உயர்வு 10 ரூபாய் உயர்வதாக வாட்டர்கேன் உற்பத்தி சங்கம் தெரிவித்திருந்தாலும் பொதுமக்களுக்கு அதிக விலையில் தான் விற்கப்படும் என்று கூறப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version