விமர்சனம்

வாரம் ஒரு படம்.. விஜய் சேதுபதியை மிஞ்சிடுவார் போல.. வாட்ச்மேன் விமர்சனம்!

Published

on

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் படம் ஓடுகிறதோ இல்லையோ, ஆனால், அடுத்தடுத்து வரிசைக் கட்டி வந்து கொண்டே இருக்கிறது. இன்னும் வெயிட்டிங் லிஸ்டில் அரை டஜன் படம் இருக்கிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளிவந்த சர்வம் தாள மயம் வந்த சுவடு கூட தெரியாமல் போனது.

கடந்த வாரம் ஜி.வி. பிரகாஷின் குப்பத்து ராஜா படம் ரிலீசானது. அந்த படமும் சொல்லும்படியாக இல்லை. இந்நிலையில், இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாட்ச்மேன் படம் இன்று வெளியாகியுள்ளது.

இந்த படமாவது எப்படி இருக்கு என்பதை பார்ப்போமா?

1.30 மணி நேரத்தில் தேவையில்லாத காதல் காட்சிகள் மற்றும் பாடல்களை தூக்கிவிட்டு, த்ரில்லர் மற்றும் காமெடி என இரண்டை மட்டும் மனதில் வைத்து இந்த படத்தை விஜய் உருவாக்கியுள்ளார்.

சமீபகாலமாக வரும் படங்களில் எல்லாம் யோகிபாபு ஒரு அங்கமாகி வருகிறார். ஆனால், அவர் மொக்கை காமெடி பண்ணுகிறார் என்கிற குற்றச்சாட்டையும் இந்த படத்தில் இருந்து நீக்கியுள்ளார் இயக்குநர் ஏ.எல். விஜய், யோகிபாபு கவுண்டர் கொடுக்கும் இடங்களில் எல்லாம் தியேட்டரில் விசில் சத்தம் பறக்கிறது. வழக்கம் போல இந்த படத்திலும் நாயகி இருக்கிறார் ஆனால், அவருக்கு சில காட்சிகள் மட்டும்தான் என்பது ஆறுதல்.

எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஜி.வி. பிரகாஷ், ஒரு கட்டத்தில் காசுக்காக திருட திட்டமிடுகிறார். ஒரு பணக்கார பங்களாவுக்குள் அவரும் அவரது நண்பர் யோகிபாபுவு திருடப் போகும் போது, அந்த வீட்டை காவல் காக்கும் வாட்ச்மேனான நாய், அவர்களை படுத்தும் படாத பாட்டும், பின்னர், அந்த வீட்டில் நடக்கும் திகில் சம்பவங்களும் தான் படத்தின் கரு.

சீட் எட்ஜ் த்ரில்லர் என்று சொல்லும் வகை படங்களில் இந்த வாட்ச்மேனும் இடம்பெறுகிறது. ஆனால், யோகிபாபு இருப்பதால், காமெடி வந்து நம்மை ரிலாக்ஸும் செய்கிறது.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு, ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை மற்றும் விஜய்யின் இயக்கம் நம்மை படத்துடன் கட்டிப் போடுகிறது.

நாயகியாக நடித்துள்ள சம்யுக்தா தனது போர்ஷன் அறிந்து நடித்து சென்றுள்ளார்.

வாட்ச்மேன் நல்ல த்ரில்லர் எண்டர்டெயின்மெண்ட் தான்.

சினி ரேட்டிங்: 3/5.

Trending

Exit mobile version