உலகம்

கண்ணீர் விட்ட கூகுளில் வேலையிழந்த இளம்பெண்.. அதன்பின் செய்தது தான் ஹைலைட்!

Published

on

கூகுள் நிறுவனத்தில் இருந்து வேலையில் இருந்து நீக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் முதலில் கண்ணீரை கண்ணீர் வடித்த நிலையில் அதன் பின் அவர் என்னென்ன செய்தார் என்பதை youtube இல் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சமீபத்தில் கூகுள் நிறுவனம் 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்தது. சிக்கன நடவடிக்கை, வளர்ந்து வரும் பொருளாதார மந்த நிலை மற்றும் பணவீக்கம் ஆகியவை காரணமாக வேலை நீக்கம் செய்யப்படுவதாக கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்து இருந்தார்.

திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் நிலை என்ன என்பதை அப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தில் இருந்து வேலையிலிருந்து நீக்கப்பட்ட நிக்கோல் சாய் என்பவர் காலை தூங்கி எழுந்த போது ஒரு குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

கூகுள் நிறுவனத்தில் இருந்து 12000 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர் என்பது தான் அந்த குறுஞ்செய்தி. உடனடியாக அந்த 12000 பேர்களில் தானும் ஒருவரா? என்பதை அறிய தனது லேப்டாப்பை எடுத்து அவர் கூகுள் நிறுவனத்தின் ஐடியை லாகின் செய்ய முயன்ற போது அவரால் லாகின் செய்ய முடியவில்லை. இதனை அடுத்து அவர் தானும் வேலை நீக்கம் செய்யப்பட்டோம் என்பதை அறிந்து கண்ணீர் விட்டார்.

கூகுள் நிறுவனத்தில் பல வருடங்களாக வேலை செய்த நிலையில் தற்போது திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டதை அறிந்ததும் அவர் அதிர்ச்சிக்கு எல்லையே இல்லை. இதனை அடுத்து அழுது கொண்டே அவர் தன்னை போல் யார் யாரெல்லாம் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள் என்பதை லிங்க்ட்-இன் பக்கத்தில் போய் பார்த்தார். வேலையிழந்த அனைவரும் சோகமாக இருப்பதை கண்டு கொண்டார். அவரால் கண்ணீரை அடக்கவே முடியவில்லை, எதிர்காலம் ஒரு பெரிய கேள்விக்குறியாக இருந்த நிலையில் இப்படியே அழுது கொண்டிருந்தால் சரியாக வராது, உடனடியாக நமது மனநிலையை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார்.

இதனையடுத்து அவர் பூமியின் சொர்க்கம் என்று கூறப்படும் லாஸ் ஏஜென்ஸில் நகரில் உள்ள டிஸ்னிலேண்டுக்கு சென்றார். அங்கு அவர் இன்பமாக தனது பொழுதையை ஒரு நாள் முழுதும் செலவு செய்தார். தனக்கு வேண்டிய விருப்பமான உணவுகள் எல்லாம் வாங்கி சாப்பிட்டார். இது குறித்த வீடியோவை அவர் பதிவு செய்துள்ளார். இன்று நாம் எதிர்கொள்ளும் பொருளாதரத்தை சிக்கலை சந்திக்க உடனடியாக ஒரு மனமாற்றம் முக்கியம், எதையும் சந்திக்க நமது மனதை தயார்படுத்த கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Day in my life getting laid off at Google

author avatar
seithichurul

Trending

Exit mobile version