விளையாட்டு

ரஹானேவுக்கு ரகசிய மெசேஜ் – Decode செய்தால் வெற்றி உறுதியா?

Published

on

அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, வரும் 26ம் தேதி தொடங்கவுள்ள பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது. ஆனால், மனரீதியாக இந்திய அணி வலிமையாக இருக்கிறதா என்றால் அது சந்தேகமே! ஏனெனில், தோல்வி அப்படி. 36 ரன்களுக்கு சரண்டரானதால், அதன் தாக்கம் வீரர்கள் மத்தியில் சற்று ஆழமாகவே உள்ளது.

எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல், கேப்டன் விராட் கோலி சொந்த காரணங்களுக்காகவும், முகமது ஷமி காயம் காரணமாகவும் தொடரில் இருந்து வெளியேறி இருப்பதால், இந்தியா மீதான பாரம் மேலும் அதிகரித்திருக்கிறது.

இந்த அனைத்து சுமைகளையும் உடைத்தெறிய வேண்டிய கட்டாயம் ரஹானேவுக்கு ஏற்பட்டுள்ளது. வீரர்களுக்குள் மீண்டும் நம்பிக்கையை விதைத்து, அவர்களிடமிருந்து ஆக்ரோஷத்தை வெளிக் கொண்டுவந்து, வெற்றியை பெற வைக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு அவர்முன் உள்ளது.

இந்நிலையில், இந்திய முன்னாள் டெஸ்ட் வீரர் வாசிம் ஜாபர், ரஹானேவுக்கு போட்டி குறித்து வாழ்த்து தெரிவித்ததுடன், ஒரு ரகசிய செய்தி ஒன்றையும் அனுப்பி இருக்கிறார். அதனை டிகோட் செய்து பார்த்து, அணி தேர்வை மேற்கொள்ள வேண்டி கேட்டிருக்கிறார்.

உங்களுக்கு ஏதேனும் புரிகிறதா?

அனைத்து வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்து கோர்த்து பாருங்கள்.

PICKGILLANDRAHUL

இப்போது வாக்கியமாக பிரித்துப் பாருங்க,

PICK GILL AND RAHUL

ரகசியத்தை புரிந்து கொள்வாரா ரஹானே?

seithichurul

Trending

Exit mobile version