தமிழ்நாடு

தடுப்பூசிக்கு வாஷிங் மெஷின் பரிசு: அதிரடி அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி!

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் பொது மக்களை அறிவுறுத்தி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் லட்சக்கணக்கானவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தடுப்பூசி செலுத்துபவர்களின் பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு தங்கம் வெள்ளி உள்பட பல பரிசுப் பொருட்களையும் கொடுத்து தடுப்பூசி போட ஊக்குவிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் தடுப்பூசி செய்து கொள்வோருக்கு குலுக்கல் முறையில் வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்ஸி, குக்கர் ஆகிய பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாத நபர்களை தடுப்பு முகாமுக்கு அழைத்து வந்தாலும் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என கரூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 18 வயது பூர்த்தி அடைந்த இருந்தால் கண்டிப்பாக தடை செய்து கொள்ளவேண்டும் என்றும், அதே போல் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துபவர்கள் சரியான நேரத்தில் தடுப்பூசி செய்து கொள்ள வேண்டும் என்றும் கரூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version