தமிழ்நாடு

ராமாவரம் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பம் அகற்றப்பட்டதா?

Published

on

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆன நிலையில் நேற்று அவர் பெங்களூரில் இருந்து சென்னை திரும்பினார். சென்னை திரும்பியவுடன் அவர் செய்த முதல் வேலை எம்ஜிஆரின் ராமாபுரம் இல்லத்திற்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து சசிகலாவை வரவேற்க சென்னை ராமாபுரம் தோட்டத்தில் கொடிக்கம்பம் ஒன்று வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த கொடிக்கம்பம் திடீரென ஒரு சில மணி நேரங்களில் தமிழக அரசால் அகற்றப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் இதுகுறித்து எம்ஜிஆரின் வளர்ப்பு மகள்கள் தொடர்ந்த வழக்கில் பிப்ரவரி 11ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சசிகலாவை வரவேற்க சென்னை ராமாபுரம் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பம் அகற்றப்பட்டதா? என்பதை சரிபார்த்து தெரிவிக்க எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் கீதா, ராதா ஆகியோர் ஆகியோர் தரப்பினர்களை சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் அந்த கொடிக்கம்பம் நடைபாதையை ஆக்கிரமித்து இருந்ததால் அகற்றப்பட்டு விட்டதாக தமிழக அரசின் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகலா நேற்று ராமாவரம் தோட்டத்திற்கு வந்து சென்றதால் தான் கொடிக்கம்பம் அகற்றப்பட்டதாக அமமுகவினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்

seithichurul

Trending

Exit mobile version