சினிமா செய்திகள்

ஓட்டுப் போட சென்ற அஜித் தாக்கப்பட்டாரா; வெளியாகியுள்ள வீடியோ உண்மைதானா?

Published

on

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது. ரஜினிகாந்த், கமல், அஜித், விஜய், சூர்யா என முன்னணி நட்சத்திரங்கள் காலையிலேயே தங்களது வாக்குச் சாவடிக்குச் சென்று ஓட்டுப் போட்டனர்.

ரஜினிகாந்துக்கு வலது கை விரலில் மை வைக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியது. மேலும், ரஜினி கமலுக்கு தனது வாக்கினை செலுத்தியதாகவும் வதந்திகள் பரவின.

இந்நிலையில், அடுத்த சர்ச்சையாக நடிகர் அஜித் வாக்களிக்க செல்லும் போது அவரை பின்னால் இருந்து யாரோ சிலர் அடித்ததாக வீடியோக்கள் பரவி பரபரப்பை கிளப்பியுள்ளன.

அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வாக்களிக்க வரும் செய்தி அறிந்து அங்கு மீடியாக்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடினர்.

இதனால், வழக்கம் போல் அஜித் வரிசையில் நின்று ஓட்டுப் போட முடியாத சூழல் உருவாக, போலீசார் அவரை நேராக வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சில பெண்கள் வரிசையில் வந்து வாக்களிக்க வேண்டும் என கூச்சல் போட்டதாகவும், அதை மீறி அஜித் செல்லும் போது அவரது தலையில் யாரோ அடித்தது போன்றும் உள்ள வீடியோ ட்விட்டர் பக்கத்தில் #ஓட்பூத்தில்செமகாட்டு என்ற ஹேஷ்டேகுடன் ட்ரெண்டானது.

விஜய் ரசிகர்கள் அஜித் குறித்து பல விதமான மீம்ஸ்களையும் அதில் பதிவிட்டு சர்ச்சையை மேலும் பெரிதாக்கினர். பதிலுக்கு அஜித் ரசிகர்களும் விஜய்யை தாக்கி மீம்ஸ் போட்டு ட்விட்டரில் சண்டைப் போட்டனர்.

seithichurul

Trending

Exit mobile version