தமிழ்நாடு

நீலகிரிக்கு தேவையில்லாமல் வந்து செல்பவர்களுக்கு எச்சரிக்கை!

Published

on

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் வெளி மாவட்ட மக்கள் சுற்றுலா போன்ற தேவையில்லாத காரணங்களுக்காக நீலகிரிக்கு வந்து சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எச்சரித்துள்ளார்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் திவ்யா, “இ-பாஸ் முறை எளிமைப் படுத்தப்பட்டதை அடுத்து, சுற்றுலா போன்ற காரணங்களுக்காக நீலகிரி வருவது அதிகரித்துள்ளது. இ-பாஸ் முறை அதில் உள்ள சிக்கல்களைக் குறைப்பதற்காகவே எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே தேவையில்லாமல் நீலகிரி மாவட்டத்திற்குள் சுற்றுலா போன்ற காரணங்களுக்காக வரக்கூடாது. திருமணம், இறப்பு போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே வெளியிலிருந்து வந்த செல்ல வேண்டும். தங்கும் விடுதிகள் போன்றவற்றில் சுற்றுலா பணிகளைத் தங்க வைக்கப்பட்டு இருந்தால் அதன் உரிமையாளர் மீதும் சேர்த்துத் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எச்சரிக்கையை மீறி யாரேனும் வந்து சென்றால் அபராதம் விதிக்கப்படும்” என்றும் மாவட்ட ஆட்சியர் திவ்யா தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version