ஆரோக்கியம்

உஷார்: மாரடைப்பை ஒரு மாதத்திற்கு முன்பே எச்சரிக்கும் 6 முக்கிய அறிகுறிகள்!

Published

on

இன்றைய வாழ்க்கை முறையால், மாரடைப்பு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. இது மிகவும் ஆபத்தான நோய், சில நேரங்களில் மாரடைப்பு ஏற்பட்டால், நோயாளி மருத்துவமனைக்கு செல்லுவதற்கும் முன்னரே உயிரிழக்கக்கூடும். மாரடைப்பு திடீரென வரும் என பெரும்பாலானவர்கள் நினைத்தாலும், உண்மையில் இது 10 நாட்களுக்கு முன்பே சில அறிகுறிகளால் எச்சரிக்கை தருகிறது. இந்த அறிகுறிகளை சரியான நேரத்தில் கவனித்தால், நோயாளியின் உயிரைக் காப்பாற்றலாம்.

6) இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.

மாரடைப்புக்கு முன் தோன்றும் முக்கிய அறிகுறிகள்:

1. மார்பில் சங்கடம் மற்றும் அழுத்தம்: மயோக்ளினிக் அறிக்கையின்படி, மாரடைப்புக்கு சில நாட்களுக்கு முன்பு மார்பில் கனம், இறுக்கம், அல்லது வலியை நோயாளி அனுபவிக்கலாம். இது மாரடைப்பின் முக்கியமான எச்சரிக்கை அறிகுறிகளில் ஒன்றாகும்.

2. சோர்வு: ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிஷிங் அறிக்கையின் படி, மாரடைப்பு வருவதற்கு 10 நாட்களுக்கு முன்பு முதல் ஒரு மாதம் வரை நோயாளிகள் அதிகளவு சோர்வை அனுபவிக்கலாம். இந்த அறிகுறி குறிப்பாக பெண்களுக்கு அதிகம் காணப்படும்.

3. அதிகப்படியான வியர்வை: இதயத்திற்கு போதிய இரத்தம் செல்லாததால், நோயாளிகள் உடலில் அதிக வியர்வை காணலாம். இந்த அறிகுறியை சாதாரணமாக எண்ணாதீர்கள்; உடனே மருத்துவசிகிச்சை பெறுவது நல்லது.

4. இதயத் துடிப்பு அதிகரிப்பு: மாரடைப்புக்கு சில நாட்களுக்கு முன்பு, நோயாளியின் இதயத் துடிப்பு அதிகரிக்கலாம். இதயத்திற்கு போதிய ரத்தம் செல்லாததால் இதயத்தில் இது காணப்படும்.

5. உடல் பல்வேறு பகுதிகளில் வலி: மாரடைப்பு வருவதற்கு முன்பாக, மார்பு, முதுகு, தோள்கள், கைகள், கழுத்து, மற்றும் தாடை ஆகிய பகுதிகளில் வலி உணரப்படலாம். இதயத்தில் ஏற்படும் பிரச்சனைகள் இந்த வலிக்கு காரணமாகும்.

6. தலைசுற்றல்: காரணமின்றி ஏற்படும் தலைசுற்றல், மயக்கம், மூச்சுத் திணறல், குறைந்த இரத்த அழுத்தம் போன்றவை மாரடைப்பின் முன்னோட்ட அறிகுறிகளாக இருக்கலாம். இந்த அறிகுறிகளை கண்டால், அவற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், உடனே மருத்துவர்களின் உதவியை நாடுங்கள்.

இந்த அறிகுறிகளை கவனித்து, சிகிச்சையை முன்கூட்டியே பெற்றால், மாரடைப்பின் ஆபத்தைத் தவிர்க்க முடியும்.

Poovizhi

Trending

Exit mobile version