உலகம்

காலயாத்திரை செய்ய ஆசையா? 80 ஆண்டுகளுக்கு முன் பூமியை காண Google Earth உதவுகிறது!

Published

on

நீங்கள் காலயாத்திரை (Time Travel) செய்ய ஆசைப்படுகிறீர்களா? 1930களில் பூமி எப்படி இருந்தது என்று பார்க்க கூகுள் எர்த் (Google Earth) உங்கள் உதவிக்கு வருகிறது. கூகுள் தனது புதிய மேம்பாட்டில், பயனர்களை 80 ஆண்டுகளுக்கு முந்தைய பூமியின் வரலாற்று செயற்கைக்கோள் மற்றும் வான்வழி படங்களை பார்க்க அழைக்கிறது.

கூகுளின் இந்த அம்சம், 1930களில் இருந்த லண்டன், பாரிஸ், வார்சா போன்ற நகரங்களின் நகர்ப்புற நிலப்பரப்புகளை ஆராய அனுமதிக்கிறது. இது பயனர்களுக்கு நேரத்தில் பின் சென்று (Time Travel) புவியின் பரிணாமத்தை காண தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.

கூகுள், 1938ல் உள்ள சான் பிரான்சிஸ்கோவிற்கும், 2024ல் அதன் தற்போதைய நிலைக்கும் இடையே உள்ள மாறுதல்களை காட்டி, புவியியல் மாற்றங்களை வெளிப்படுத்தியுள்ளது. இதிலிருந்து, பல நகரங்களில் போக்குவரத்து துறைமுகங்கள் மாறி இன்று உணவகங்களாக மாற்றப்பட்டுள்ளன என்பதை காணலாம்.

இந்த புதிய அம்சத்தை மொபைல் மற்றும் இணையத்தில் பயன்படுத்த முடியும். மேலும், கூகுள், 80க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது வீதிக் காட்சி (Street View) அம்சத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. பயனர்களுக்கு மேம்பட்ட படத் தரம் கிடைக்க, AI தொழில்நுட்பம் மூலம் காட்சிகளை தெளிவாக மாற்றும் பணியில் உள்ளது.

 

Poovizhi

Trending

Exit mobile version