இந்தியா

ஆதார் எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கின் பேலன்ஸை தெரிந்து கொள்ள முடியுமா? எப்படி?

Published

on

ஆதார் எண் என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் அடிப்படையான தேவை என்பது மட்டுமின்றி அந்த ஆதார் எண் பல்வேறு ஆவணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஆதார் எண்ணை வைத்து நமது வங்கி கணக்கின் பேலன்ஸ்சை தெரிந்துகொள்ள முடியும் என்பது ஆச்சரியமான தகவலாக பலருக்கு இருக்கும்.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆதார் எண் அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் தனித்தனியாக 12 இலக்க எண் ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆதார் எண்ணை வங்கி கணக்கு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்பட கிட்டத்தட்ட அனைத்து ஆவணங்களிலும் இணைக்கப்பட்டு விட்டது. அது மட்டும் இன்றி சமீபத்தில் ஆதார் எண் மற்றும் மின்சார எண்ணையும் இணைக்க வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் ஒரு ஆதார் எண்ணை வைத்து ஒரு நபரின் ஜாதகத்தையே தெரிந்து கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில் தற்போது ஆதார் எண்ணை வைத்து அந்த ஆதார் எண்ணுக்குரியவரின் வங்கி கணக்கில் பேலன்ஸ் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம் என்ற தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

வங்கி கணக்கு திறக்கும்போதே ஆதார் எண் கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் ஏற்கனவே வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் 12 இலக்க ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வங்கி உத்தரவிட்டது என்பது தெரிந்ததே. எனவே தற்போது வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் ஆதார் எண்ணையும் இணைத்து இருப்பார்கள்.

இந்த நிலையில் இந்த ஆதார் எண்ணை வைத்து இன்டர்நெட் இல்லாமல், இணையதளம் இல்லாமல், ஸ்மார்ட் போன் இல்லாமல் வங்கியில் உள்ள பேலன்ஸ் எப்படி தெரிந்து கொள்ளலாம் என்பது ஒரு ஆச்சரியமான தகவலாக உள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள், வங்கிக்கு நேரடியாக செல்ல முடியாத மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திலிருந்து ஆதார் எண்ணை மட்டும் பயன்படுத்தி தங்களுடைய வங்கி கணக்கை சரிபார்த்துக் கொள்ளலாம்.

முதலில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் ஃபோனில் இருந்து *99*99*1# என்ற எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும். அதன் பின் ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க எண்களை பதிவு செய்ய வேண்டும். உங்கள் ஆதார் எண்ணை மீண்டும் பதிவு செய்ய வேண்டும். இதனை அடுத்து ’ஆதார் அடையாள ஆணையம்’ உங்களுடைய வங்கி கணக்கு பேலன்ஸை எஸ்எம்எஸ் மூலம் அனுப்பும். இதன்படி ஆதார் மூலம் வங்கி கணக்கில் உள்ள பேலன்ஸை தெரிந்து கொள்ளலாம்.

seithichurul

Trending

Exit mobile version