இந்தியா

தூக்கத்தினால் இறங்க வேண்டிய ஸ்டெஷனை தவறவிடும் நபரா நீங்கள்? உங்களுக்காக ரயில்வேதுறையின் புதிய வசதி

Published

on

ரயில் பயணத்தின்போது தூங்குவதால் நாம் இறங்க வேண்டிய ரயில் நிலையத்தை தவறவிடுவதை தவிர்ப்பதற்காக வேக்கப் கால் என்ற வசதியை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி ரயில் பயணிகளுகு மிகப்பெரிய பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது

இரவு நேரத்தில் பர்த் சீட்டில் தூங்கும் போது சில பயணிகள் தாங்கள் இறங்க வேண்டிய ரயில் நிலையத்தை தூக்கத்தினால் தவற விட்டு விடுவதாக பல செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் ரயில் பயணத்தின்போது தூக்கத்தினால் தங்களது ரயில் நிலையத்தை தவற விடுபவர்களுக்கு இந்திய ரயில்வே அசத்தலான திட்டமொன்றை செயல்படுத்தி வருகிறது

இதற்காகவே வேக்கப்கால் என்ற திட்டத்தை இந்தியன் ரயில்வே கொண்டு வந்துள்ளது. இந்த சேவை மூலம் நாம் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வருவதற்கு 20 முன்பு நிமிடங்களுக்கு முன்பே ரயில்வே நிர்வாகம் உங்களை கால் செய்து எழுப்பிவிடும். இந்த வசதியை செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்

* உங்கள் மொபைல் ஃபோனிலிருந்து IRCTC உதவி எண்ணான 139ஐ அழைக்கவும்.

* அழைப்பு இணைக்கப்பட்டதும், உங்களுக்கு தெரிந்த மொழியை தேர்வு செய்ய வேண்டும்.

* அதன் பிறகு எந்த தொலைபேசி எண்ணுக்கு வேக் அப் கால் அலெர்ட் கொடுக்க வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்

* அதனைத் தொடர்ந்து உங்களுடைய 10 இலக்க PNR எண்ணை பதிவிட்டு, 1-ஐ அழுத்தி உறுதிப்படுத்த வேண்டும்.

இதை செய்தால் போதும், நீங்கள் நிம்மதியாக தூங்கலாம்.

 

seithichurul

Trending

Exit mobile version