சினிமா செய்திகள்
வயசானா பிரியா பவானி ஷங்கர் எப்படி இருப்பாங்கன்னு தெரியுமா?
சமூக வலைதளங்களில் மக்களை கவர்வதற்காகவும் ஆக்டிவாக வைத்திருப்பதாகவும், அடிக்கடி ஏதாவது ஒரு சேலஞ்ச் உற்பத்தி ஆகிக் கொண்டே இருக்கும்.
அந்த வகையில் தற்போது அறிமுகமாகி இருக்கும் ஒரு சவால் என்றால், அது ஃபேஸ் ஆப் சவால் தான்.
பிரபலங்கள் தாங்கள் வயதானால் எப்படி இருப்பார்கள் என்பதை காட்டும் வகையில், ஃபேஸ் ஆப்பில் வயதான தோற்றத்தை காட்டும் ஆப்ஷன் ஒன்று அறிமுகமாகி உள்ளது.
இந்திய அணி வீரர்களின் வயதான தோற்றத்தை காட்டி பிரபலமான இந்த ஆப்பை தற்போது அனைவரும் பயன்படுத்த துவங்கி விட்டனர்.
இந்நிலையில், மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் படங்களின் நாயகி பிரியா பவானி சங்கர் தனது வயதான தோற்ற புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஃபேஸ் ஆப் சவாலை ஏற்றுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.