இந்தியா

அசாம், மேற்குவங்கத்தில் இன்று முதல்கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

Published

on

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் ஏற்கனவே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலின் வாக்குப்பதிவு சற்றுமுன்னர் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 77 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அசாமில் 47 தொகுதிகளுக்கும் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும் சற்றுமுன்னர் வாக்குப்பதிவு தொடங்கியது.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்பதும் வாக்காளர்கள் தங்களுடைய அடையாள அட்டையை கொண்டு வந்து வாக்குப்பதிவை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா பரவும் காலம் என்பதால் தனிமனித இடைவெளியை கடைபிடித்து வரிசையில் வாக்காளர்கள் நிற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள 47 தொகுதிகளில் 264 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர் என்பதும் அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் 30 தொகுதிகளில் 191 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் இடையே கடும் போட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version