தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலில் நடந்த வடிவேலு சினிமா காமெடி: தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி!

Published

on

சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் பெரும்பாலான பகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வந்துள்ள தகவலின்படி மாவட்ட ஊராட்சி ஒன்றியத்தில் 17 திமுக வேட்பாளர்களும் ஊரக ஊராட்சி ஒன்றியத்தில் 17 திமுக வேட்பாளர்களும் முன்னிலை வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் தலா ஒருவர் அதிமுக முன்னிலை வகித்து வருவதாகவும் காங்கிரஸ் 2 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர்க்ள் முன்னிலை வகித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் இந்த தேர்தலில் ஒரு சில காமெடிகளும் நடந்துள்ளது. அவற்றில் ஒன்று திருப்பத்தூர் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வார்டு 1 என்ற பகுதியில் வாக்களித்த இரண்டு பேர் வேட்பாளரிடம் உங்களுக்கு தான் வாக்களித்தேன் என்பதை நிரூபிப்பதற்காக வாக்குச்சீட்டு கையில் எடுத்துக்கொண்டு பூத் சிலிப்பை வாக்குப்பெட்டியில் செலுத்தியுள்ளனர். வடிவேலு படத்தில் வரும் காமெடி போன்ற இந்த செயல் தேர்தல் அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலையார் பேட்டை ஊராட்சி ஒன்றியம் சந்திரபுரம் ஊராட்சியின் 6வது வார்டில் வாக்குச் சீட்டுக்கு பதிலாக, வாக்காளர் அடையாள அட்டையை வாக்காளர்கள் சிலர் ஓட்டு பெட்டிக்குள் செலுத்தியுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version