இந்தியா

ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பு: தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு!

Published

on

ஆதார் அட்டையுடன் கிட்டதட்ட அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டு விட்டன என்ற நிலையில் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்றும் அப்பொழுதுதான் கள்ள ஓட்டு முழுமையாக தவிர்க்கப்படும் என்றும் பல அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன.

இந்த நிலையில் ஆகஸ்ட் 1முதல் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நேற்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

காணொளி வழியாக நடந்த இந்த ஆலோசனையின் பின்னர் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் கமிஷன் வழங்கி இதுகுறித்த அறிவுரைகளையும் வழங்கினார்.

வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் தாமாக முன்வந்து தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க 6பி என்ற படிவம் வழங்கப்பட உள்ளது என்றும் இந்த படிவத்தை தேர்தல் கமிஷன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஆன்லைன் மூலமாகவே ஆதார் வாக்காளர் அடையாள இணைத்துக் கொள்ளலாம் என்றும் தேர்தல் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் கமிஷன் அலுவலர்கள் வீடு வீடாக சென்று 6பி படிவத்தை வழங்கி ஆதார் – வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க அறிவுறுத்துவார்கள் என்றும் இதுகுறித்து சிறப்பு முகாம்களும் நாடு முழுவதும் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்காதவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படாது என்றும் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version