டிவி

‘ரம்யாவுக்கு ஓட்டு போட்டா தள்ளுபடி’ – துணி கடை உரிமையாளரின் பலே விளம்பரம்!

Published

on

பிக் பாஸ் சீசன் 4 ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவடைய இருக்கிறது. இதனால் ஒவ்வொரு வாரமும் போட்டிகள் கடுமையாகிக் கொண்டே போகிறது. குறிப்பாக வாரத்துக்கு ஒரு எவிக்‌ஷனாவது இருக்கிறது.

தற்போதுள்ள சூழல்படி பார்த்தால் ஆரி, ரியோ, ரம்யா பாண்டியன் உள்ளிட்டவர்களில் ஒருவர் பிக் பாஸ் டைட்டில் வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த வார எவிக்‌ஷனில் ஆஜித், கேப்ரியல்லா, ஆரி, ஷிவானி மற்றும் அனிதா ஆகியோர் உள்ளனர். வழக்கம் போல இந்த வாரமும் ஆரிதான் அதிக மக்களின் வாக்குகளை வாங்கி லீடிங்கில் இருக்கிறார். தங்களது விருப்பமான நட்சத்திரத்துக்கு ஆதரவாக நெட்டிசன்ஸ் பல்வேறு சமூக வலைதளங்களில் தொடர்ந்து ப்ரொமோட் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை ரம்யா பாண்டியனின் ரசிகர் ஒருவர், அவருக்கு ஆதரவாக வைத்துள்ள விளம்பரம் வைரலாகி வருகிறது. துணிக் கடை வைத்திருக்கும் ரம்யாவின் அந்த ரசிகர், ‘6 சட்டை வாங்கினால் 1000 ரூபாய் மட்டுமே, 4 சட்டை வாங்கினார் 1000 ரூபாய் மட்டுமே, 5 டி-ஷர்ட் வாங்கினால் 1000 ரூபாய் மட்டுமே. ரம்யா பாண்டியனுக்கு ஓட்டு போட்டால் 11 சதவிகித தள்ளுபடி கொடுக்கப்படும்’ என்று ஆங்கிலத்தில் தன் கடைக்கு வெளியில் விளம்பரம் வைத்துள்ளார். இது சமூக வலைதளங்களில் அதிகமாக பரிகப்பட்டு வருகிறது.

 


 

Trending

Exit mobile version