தமிழ்நாடு

மே 2ல் திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறுமா? தேர்தல் ஆணையர் தகவல்

Published

on

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வரும் 29ம் தேதியுடன் அனைத்து தேர்தல்களும் முடிவடைகின்றன. இதனை அடுத்து மே மாதம் இரண்டாம் தேதி 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் வாக்க்கு எண்ணிக்கை பணி தள்ளி வைக்கப்படுமா என்ற தகவல் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை சிறப்பாக ஏற்பாடு செய்யப்படும் என்றும் இது குறித்து சென்னை ஐகோர்ட்டில் விளக்கம் அளிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்களின் இந்த பேட்டியை அடுத்து மே இரண்டாம் தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்பது உறுதியாகி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version