தமிழ்நாடு

முதல்வர் பிரச்சாரத்தின்போது சலசலப்பை ஏற்படுத்திய தொண்டர்: தர்மபுரியில் பரபரப்பு

Published

on

தர்மபுரியில் முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென தொண்டர் ஒருவர் குறுக்கிட்டு கேள்வி எழுப்பியதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சம்பத் குமார் என்பவரை ஆதரித்து பேருந்து நிலையம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர் திடீரென முதல்வரை பார்த்து தமிழகத்திலேயே தர்மபுரி மாவட்டம் மட்டும்தான் வறட்சி மாவட்டமாக உள்ளது என விமர்சனம் செய்தார். இதனை அடுத்து ’கொஞ்சம் இருப்பா நான் பேசிக்கொண்டு இருக்கும் போது குறுக்கே பேசாதே’ என்று கூறிய முதல்வர் அதன்பின் பேச்சைத் தொடர்ந்தார்.

இதனை அடுத்து அந்த தொண்டரை காவல்துறையினர் உடனடியாக அப்புறப்படுத்தினர். இருப்பினும் அவரது ஆவேசமாக கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே அமைச்சர் விஜயபாஸ்கர் அவர் பேசியபோது சிறுமி ஒருவர் குறுக்கிட்டு சாலைகள் மிக மோசமாக இருப்பதாக கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது முதல்வர் பேசியபோதும் தொண்டர் ஒருவர் குறுக்கிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version