தொழில்நுட்பம்

வோடபோன் புதிய திட்டம்.!

Published

on

வோடபோன் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்கு ரூ.169 விலையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது வோடபோன் நிறுவனம் மற்றொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. வோடாபோன் ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் ரூ.199 மற்றும் ரூ.399 என்ற விலையில் இரண்டு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

வோடபோன் இன் புதிய ரூ.199 திட்டத்தின் படி தினமும் 1.5 ஜிபி, 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. மொத்தமாக இத்திட்டத்தின் கீழ் 42 ஜிபி டேட்டா பயனருக்கு 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் 100 எஸ்.எம்.எஸ். தினமும் வழங்கப்படுகிறது.

வோடபோன் இன் புதிய ரூ.399 பிரீபெயிட் திட்டத்தின் படி தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இத்திட்டத்தைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் 100 எஸ்.எம்.எஸ்.கள் தினமும் என மொத்தம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு இந்த திட்டத்தின் கீழ் தினமும் 1.4 ஜிபி டேட்டா 70 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்பட்டது. அதன்படி தற்பொழுது வேலிடிட்டியின் அளவு நீட்டிக்கப்பட்டு, தினசரி டேட்டா அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டு சலுகைகளிலும் தினசரி வாய்ஸ் கால் அளவு 250 நிமிடங்களுக்கும், வாரம் 1000 நிமிடங்கள் என மாற்றப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட சேவையின் அளவு கடந்ததும், வாய்ஸ் கால்ஸ் பயன்பாட்டிற்கு நொடிக்கு 1.2 பைசா அல்லது நிமிடத்திற்கு ஒரு ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதீத டேட்டா பயன்பாட்டிற்கு ஒரு எம்.பி டேட்டாவுக்கு 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படும்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version