தொழில்நுட்பம்

Vodafone நிறுவனம் வெளியிடும் Wi-Fi காலிங் திட்டம்… இனி ஜாலி காலிங்தான்!

Published

on

வோடாபோன் ஐடியா (விஐ) நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு வை-ஃபை காலிங் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாம். இது குறித்து நம்பத்தகுந்த வட்டாரங்களிடமிருந்து தகவல்கள் வந்துள்ளன.

இந்தியாவில் வோடாபோன் நிறுவனத்துக்குப் போட்டியாளராக இருக்கும் ஏர்டெல் நிறுவனம் மற்றும் ஜியோ டெலிகாம் நிறுவனங்கள் ஏற்கெனவே இந்த வை-ஃபை காலிங் திட்டத்தை அறிமுகப்படுத்திவிட்டன. இந்நிலையில் வோடாபோன் நிறுவனமும் இந்தப் புதிய வசதியை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பிட்ட சில வட்டங்களுக்கு இந்த வை-ஃபை காலிங் வசதியை வோடாபோன் நிறுவனம் ஏற்கெனவே பயன்பாட்டிற்கு விட்டுள்ளதாம். கூடிய விரைவில் இந்தியாவில் இருக்கும் தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த வசதியை வோடாபோன் நிறுவனம் கொண்டு போகும்.

இந்த வை-ஃபை காலிங் வசதி மூலம் நெட்வோர்க் கவரேஜ் இல்லாத அல்லது மிகவும் குறைவாக இருக்கும் இடங்களில் இருந்து கூட அழைப்புகள் மேற்கொள்ள முடியும். இந்த வசதியைப் பயன்படுத்த சில மென்பொருள் அப்டேட்களை வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டி இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

 

Trending

Exit mobile version