வணிகம்
வோடாஃபோன் ஐடியா பிராண்ட் பெயரில் மாற்றம்.. புதிய பெயர் என்ன தெரியுமா?
2018-ம் ஆண்டு இணைந்த வோடாஃபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள், இதுவரை வோடாஃபோன் ஐடியா என்று தனித்தனியாகச் செயல்பட்டு வந்தன.
இந்நிலையில் திங்கட்கிழமை வோடாஃபோன் ஐடியாவின் பெயர் ‘Vi'(வீ), என்று மாற்றப்பட்டு ஒரே நிறுவனமாகச் செயல்பட உள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மொபைல் போன் சந்தாதார்கள் எண்ணிக்கையின் படி ‘Vi’ 3-ம் இடத்தில் உள்ளது. இணையும் போது இந்தியாவின் நம்பர் 1 டெலிகாம் நிறுவனமாக இருந்தது. ஆனால் ஜியோவின் ஆதிக்கத்தால் சுருண்டது.
நிதி திரட்டும் போது இரண்டு நிறுவனங்களும் தனித்தனியாகச் செயல்பட்டு வந்ததில் சிக்கிலிருந்து வந்தது. தற்போது டெலிகான் துறை 25,000 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட அனுமதி வழங்கியுள்ளது.
அமேசான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இந்த முதலீட்டை ‘Vi’-ல் செய்ய உள்ளனர்.