தொழில்நுட்பம்

Vi வழங்கும் ரூ.399 ‘டிஜிட்டல் எக்ஸ்க்ளூசிவ்’ பிளான்!

Published

on

வோடபோன் ஐடியா நிறுவனம் புதிய ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.399 விலையில் வாடிக்கையாளர்களுக்கு புதிய சிம் வழங்கப்படுகிறது. ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் என இரண்டிற்கும் பொருந்தும் வகையில் இந்த ‘டிஜிட்டல் எக்ஸ்க்ளூசிவ்’ எனும் சலுகையை அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த ரூ.399 விலை ப்ரீபெய்ட் ஆஃபரில், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் வசதிகள், ரூ.297 சலுகையை விட அதிக வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. மேலும் ‘வி’ மூவிஸ் மற்றும் டிவி சேவை போன்ற அம்சங்கள் கூடுதலாக வழங்கப்படுகின்றன.

அதேபோல், போஸ்ட்பெய்ட் ஆஃபரில் 150 ஜிபி டேட்டா, ரோல் ஓவர் வசதி, எஸ்எம்எல் போன்ற வசதிகள் தரப்படுகிறது.

வி வெப்சைட்டில் புதிய சிம் வாங்குவோர், இந்த ரூ.399 ஆஃபரை தேர்வு செய்து கொள்ளலாம். ப்ரீபெய்ட், ஆஃபரில் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் போன்றவை 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

அதுவே போஸ்ட்பெய்ட்டில், 40 ஜிபி டேட்டா, மாதம் 100 எஸ்எம்எஸ், 180 நாட்கள் வேலிடிட்டியுடன் 150 ஜிபி டேட்டா, 200 ஜிபி ரோல் ஓவர், வி மூவிஸ், தொலைக்காட்சி அந்த போன்ற வசதிகள் தரப்படுகிறது.

 

Trending

Exit mobile version