உலகம்

தங்க அரண்மனையில் காதலியுடன் ரகசியமாக வாழ்கிறாரா புதின்?

Published

on

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அவரது காதலியும் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபேவா ஆகிய இருவரும் தங்கள் குழந்தைகளுடன் ரகசிய ஆடம்பரமான அரண்மனை ஒன்றில் வாழ்ந்து வருவதாக அறிக்கை ஒன்று கூறியுள்ளது.

புதின் தனது காதலியுடன் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து சுமார் 400 கிமீ தொலைவில் உள்ள வால்டாயில் உள்ள ஒரு ரகசிய அரண்மனையில் வசிப்பதாக Proekt என்ற ஊடகம் தெரிவித்துளது. இந்த பகுதியில் உள்ள ஒரு தனிப்பட்ட அரண்மனையில் புதின் வசிப்பதாக கூறியுள்ளது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள குளிர்கால அரண்மனையை ஒத்த இந்த “தங்க மாளிகை” 1996 இல் கட்டப்பட்டதாகவும், புதின் அரசியலில் நுழைந்த சில ஆண்டுகளில் தனது மனைவி லியுட்மிலா ஓச்செரெட்னாயாவை விவாகரத்து செய்து அதன்பின் காதலி கபீவாவை வீட்டிற்கு அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த ஆடம்பர அரண்மனையில் சோலாரியம், கிரையோ சேம்பர், 25 மீட்டர் நீச்சல் குளம், ஹம்மாம், சானா, மண் அறை, மசாஜ் குளியல், அழகு சாதனவியல் மற்றும் பல் மருத்துவப் பகுதிகள் கொண்ட ஒரு பெரிய ஸ்பா ஆகியவை உள்ளதாம். மேலும் குழந்தைகளுடன் பெரும்பாலான நேரத்தை புதின் இந்த ரகசிய இல்லத்தில் செலவழித்து வருவதாகவும், இந்த அரண்மனைக்கு உயரடுக்கு FSO பாதுகாப்பு உண்டு என்றும் கூறப்படுகிறது.

ரஷ்ய அதிபரான புதின் $1,40,000 சம்பளம் பெறுகிறார். 800 சதுர அடி பிளாட் மற்றும் மூன்று கார்கள் வைத்திருக்கிறார். புதினின் நெருங்கிய உறவினர்கள் பில்லியன் கணக்கில் சொத்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அவரது உறவினர்களில் ஒருவர் 1.4 பில்லியன் டாலர் மாளிகையின் உரிமையாளர் என்றும் வதந்தி பரவுகிறது. இந்த மாளிகை கற்பனை செய்ய முடியாத அளவில் வசதிகள் கொண்டது என்றும், 1,90,000 சதுர அடி கொண்ட இந்த மாளிகைக்கு புதின் குடிசை” என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த மாளிகையில் சுவரோவியமான கூரைகள், கிரேக்க கடவுள்களின் சிலைகள் வரிசையாக அமைக்கப்பட்ட பளிங்கு நீச்சல் குளம், 27,000 சதுர அடி விருந்தினர் மாளிகை, பாரம்பரிய ஹம்மாம்கள் கொண்ட ஸ்பாக்கள், ஒரு இசைக் கூடம், ஊழியர்களுக்கான அறைகள், ஒரு தியேட்டர், ஒரு பனிக்கட்டி ஹாக்கி ரிங்க், ஒரு சூதாட்ட விடுதி, $1,00,000க்கும் அதிகமான மதுபானங்கள் என திகைப்பூட்டும் பல அம்சங்கள் இந்த மாளிகையில் உள்ளதாம்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version