தமிழ்நாடு

சசிகலாவுக்கு பல முறை கொரோனா பரிசோதனை!

Published

on

மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலா, பெங்களூரு பவ்ரிங் மருத்துவமனையில் இருந்து விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு, ரேபிட் டெஸ்ட் மூலமாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் கொரோனா இல்லை என்று முடிவு வெளியானது. அதன்பிறகு ஆர்டி பிசிஆர் கருவி மூலம் கொரோனா தொற்று பரிசோதனையிலும் கொரோனா இல்லை என்பது உறுதியானது. இதனிடையே மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சாதாரண வார்டில் இருந்து அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

சசிகலாவுக்கு கொரோனா எதுவும் இல்லை என்றாலும்,  சிடி ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்யும்படி உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், தற்போது சசிகலா அனுமதிக்கப்பட்டுள்ள சிவாஜி நகர் அரசு பவ்ரிங் மருத்துவமனையில் சிடி ஸ்கேன் பழுதாகியுள்ளது. இதனையடுத்து வேறு மருத்துவமனைக்கு அவரை அனுமதிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் சிவாஜி நகருக்கு அருகிலுள்ள விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட உள்ளது.  வரும் 27 ஆம் தேதி சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகும் நிலையில், பல முறை கொரோனா பரிசோதனை, மூச்சுத்திணறலுக்கான சிகிச்சை அளிக்கப்படுவது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

Trending

Exit mobile version