தமிழ்நாடு

தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா! பழனிசாமி-மோடியின் மாஸ்டர் பிளான்?

Published

on

மூச்சுத்திணறல் காரணமாக சசிகலா பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பழனிசாமி-மோடியின் சந்திப்புக்கு பிறகே இந்த சம்பவம் நடந்துள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மூச்சுத்திணறல் காரணமாக சசிகலா பெங்களூரு பரப்பன மருத்துவமனையில் இருந்து, போரிங் மருத்துவமனைக்கு நேற்று மாலை மாற்றப்பட்டார். முதற்கட்டமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு சர்க்கரை அளவு அதிகமாகவும், காய்ச்சல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.  இரண்டு மணி நேரம் தீவிர சிகிச்சைக்குப் பிறகு சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் மீண்டும் சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் மீண்டும் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியே சொல்லப்படவில்லை. உறவினர்கள் யாரும் சசிகலாவைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி-பிரதமர் மோடி சந்திப்புக்கு பிறகே சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இது மாஸ்டர் பிளானாக இருக்கலாம் என்றும் நெட்டின்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக நேற்று முன்தினம் டெல்லியில் பிரதமர் மோடியை முதல்வர் பழனிசாமி  நேரில் சந்தித்து பேசினார். சந்திப்பு முடிந்ததும் செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி பேசினார். அப்போது அவர், சசிகலா மீண்டும் கட்சிக்குள் வர வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக பேசியிருந்தார். சசிகலா வரும் 27 ஆம் தேதி சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.  எனவே, டெல்லி சந்திப்பில் சசிகலாவை குறித்து பேசப்பட்டுள்ளது என்பது  தெரிவாக தெரிவதாகவும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version