டிவி

’மறைந்த நடிகை சித்ரா-வை நான் மிரட்டினேனா?’- வேதனைப்படும் விஜே ரக்‌ஷன்

Published

on

மறைந்த சின்னத்திரை நடிகை விஜே சித்ரா-வின் திடீர் மறைவு, ரகசிய திருமணம், அரசியல் பின்னணி எனப் பல தலைப்புகளில் பல செய்திகள் இணையங்களில் உலா வருகின்றன.

அதுபோன்றே விஜய் டிவி விஜே ரக்‌ஷன் நடிகை சித்ராவை மிராட்டினார் என்றும் இருவருக்கும் தொடர்பு இருந்தது என்றும் சில தளங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், இவை அனைத்தையுமே மறுக்கு விஜே ரக்‌ஷன், “என்னையும் சித்ராவையும் இணைத்துப் பேசுவது வேதனை அளிக்கிறது. இதுவெறும் புரளி. எனக்கும் அவருக்கும் நல்ல நட்பு கூட கிடையாது.

இப்படித்தான் ஜாக்குலினையும் என்னையும் குறித்து செய்தி பரப்பினார்கள். எதிலும் உண்மை இல்லை. நான் படிப்படியாக வளர்ந்து வருகிறேன். இந்தத் துறைக்கு வரும் முன்பே எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. காதல் திருமணம்தான் என்பதால் மனைவி புரிந்து கொள்கிறார். ஆனாலும், தொழில் ரீதியாக இந்தப் புரளிகள் என்னை வெகுவாகப் பாதிக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version