டிவி

சித்ராவின் கடைசி தருணங்கள் இவை: மனதை நொறுங்க வைக்கும் வீடியோ!

Published

on

சின்னத்திரை நடிகை சித்ரா பங்கேற்ற கடைசி நிகழ்ச்சியின் சிறப்பு வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. விஜய் டிவி, இது குறித்தான வீடியோவை ரிலீஸ் செய்துள்ளது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ‘முல்லை’ என்ற ரோலில் நடித்து தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர் சித்ரா. அவர் சில நாட்களுக்கு முன்னர், தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது இச்சம்பவம். சித்ராவின் கணவர் ஹேம்நாத், மன ரீதியாக கொடுத்த துன்புறுத்தல்கள் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. இப்படி நினைத்ததற்கு முக்கிய காரணம், ஹேம்நாத் பற்றி சித்ராவுடன் நடித்த சக நடிகர்கள் சொன்ன கருத்துகள்தாம். இந்நிலையில் நேற்று முன் தினம் ஹேமந்த் கைது செய்யப்பட்டார்.

இப்படியான சூழலில், விஜய் டிவி, தன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ஸ்டார்ட் மியூசிக்’ ஷோவில் சித்ரா பங்கேற்ற உருக்கமான வீடியோவைப் பகிர்ந்துள்ளது. இதுவே சித்ரா பங்கேற்ற கடைசி டிவி நிகழ்ச்சி என்றும் சொல்லப்படுகிறது.

வீடியோ இதோ:

Trending

Exit mobile version