சினிமா செய்திகள்

சின்னத்திரை சித்ராவின் முதல் மற்றும் கடைசி படம் ‘கால்ஸ்’ ரிலீஸ் தேதி!

Published

on

சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா நடித்த முதல் மற்றும் கடைசி திரைப்படமான ‘கால்ஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென தனியார் ரிசார்ட் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு அவரது கணவர் ஹேமந்த் தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் சின்னத்திரை சித்ரா முதல் முதலாக பெரிய திரையில் ‘கால்ஸ்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் நடித்து முடித்த நிலையில் தான் திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கால்ஸ்’ படம் பிப்ரவரி 26ம் தேதி வெளியிட ரிலீசாக உள்ளது என்பதும் இந்த படத்தை பிரபல விநியோகஸ்தர் நிறுவனமான ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் சபரிஷ் என்பவர் இயக்கியுள்ளார். சித்ரா உடன் ஆர் சுந்தர்ராஜன், வினோதினி, ஸ்ரீரஞ்சனி, தேவதர்ஷினி உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற தொலைக்காட்சி சீரியலில் முல்லை என்ற கேரக்டரில் நடித்து அனைவர் மனதிலும் குடிபுகுந்த சித்ராவின் முதல் மற்றும் கடைசி திரைப்படமான ‘கால்ஸ்’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version