சினிமா செய்திகள்

எப்பவாவதுன்னா ஓகே, எப்ப பார்த்தாலும் இப்படியா? ‘கர்ணன்’ படத்திற்கு விவேக் டுவீட்!

Published

on

தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே,

இந்த திரைப்படம் வெளியான அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் ஆகி ரூபாய் 10 கோடிக்கு மேல் முதல் நாள் வசூல் செய்துள்ளது. இன்று முதல் கொரோனா கட்டுப்பாடு காரணமாக திரையரங்குகளில் 50 சதவிகிதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்றாலும் இந்த படம் இன்றும் நாளையும் நல்ல வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி வரும் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை தினங்கள் என்பதால் இந்த படம் வேற லெவல் வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில் காமெடி நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் ’எப்பவாவது ஹிட் கொடுத்தா ஓகே, எப்ப பார்த்தாலும் ஹிட் கொடுத்தா எப்படி தனுஷ் ப்ரோ?’ என தனுஷுடன் அவர் நடித்த படிக்காதவன் பட பாணியில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் பதிவு செய்த இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

 

 

Trending

Exit mobile version