தமிழ்நாடு

இது மீம்ஸ் அல்ல! உண்மையில் ‘சிங்கம்’ படத்தில் சொன்னது: விவேக் டுவீட்

Published

on

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிவிட்டதை அடுத்து வெயில் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டால் வெயில் மண்டையைப் பிளக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பொதுமக்களுக்கு வெயிலின் கொடூரத்தை இருந்து தப்பிக்க ஒரே வழி மர நிழல்தான் என்பதும் அதனால் தான் மரங்களை வளர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை தெரிவித்து வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மரம் வளர்க்க வேண்டியதன் அவசியத்தை அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் நடிகர் விவேக் கூறி வருகிறார் என்பதும் ஒரு கோடி மரங்கள் நடவேண்டும் என்ற இலக்கை தான் வைத்திருப்பதாக பல பேட்டிகளில் அவர் கூறியுள்ளார். மேலும் இதனை அவர் மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் இடம் உறுதி அளித்ததாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் மரம் வளர்ப்பது குறித்து அவர் இன்று பதிவு செய்த டுவிட்டில், ‘சிங்கம் என்ற படத்தில் ஒரு வசனம் வரும். தமிழ்நாட்டில் மூன்றே மூன்று கிளைமேட் தான், நல்லா வெயில் அடிக்கும், பயங்கரமாக வெயில் அடிக்கும், கொடூரமாக வெயில் அடிக்கும்’ என்ற வசனத்தை குறிப்பிட்டு, இந்த வசனம் உண்மையில் மீம்ஸ் அல்ல, உண்மை நிலவரம் தான். இந்த நிலை மாறவேண்டும் என்றால் மரம் வளர்க்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version