சினிமா செய்திகள்
வைரலாகும் விஸ்வாசம் மேகிங் வீடியோ!
சிவா இயக்கத்தில் அஜித் – நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் படம் ஒரு மாதம் நெருங்கி வரும் நிலையிலும் வசூல் வேட்டையை தொடர்ந்து தியேட்டர்களில் நடத்தி வருகிறது.
100 கோடி 150 கோடி என பாக்ஸ் ஆபிஸ் கணக்குகள் பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்களுக்குள் போட்டிகள் நிலவினாலும், ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் தங்களது தலைவர்களின் படங்களை இம்முறை நன்றாகவே கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு அஜித் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து கொடுக்க நினைத்த விஸ்வாசம் படக்குழு படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது.
15 மணி நேரத்தில் இந்த மேக்கிங் வீடியோ 7 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. விரைவில் ஒரு மில்லியன் ஹிட்ஸ்களை அள்ளி யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடிக்க தல ரசிகர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.