சினிமா
யூடியூப் டிரெண்டிங்கில் விஸ்வாசம் மோஷன் போஸ்டர் முதலிடம்!
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு, யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.
வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி இணைந்துள்ள படம் விஸ்வாசம். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாகிறது.
பில்லா, ஏகன், ஆரம்பம் படங்களை தொடர்ந்து நான்காவது முறை இந்த படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
நேற்று வெளியான மோஷன் போஸ்டரில், தூக்குத் துரைன்னா அடாவடி என தம்பி ராமைய்யா அஜித்தின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் வண்ணமாக மோஷன் போஸ்டர் மாஸாக உள்ளது.