சினிமா செய்திகள்

அமேசானில் விஸ்வாசம்.. தமிழ்ராக்கர்ஸில் ஹெச்.டி. பிரின்ட்!

Published

on

அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் திரைப்படம், தியேட்டர்களில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வரும் பிப்ரவரி 28ம் தேதி விஸ்வாசம் படத்தின் 50வது நாளை ரசிகர்கள் தியேட்டர்களில் வெகு விமர்சையாக கொண்டாட திட்டமிட்டு இருந்தனர்.

இந்நிலையில், விஸ்வாசம் படத்தின் ஆன்லைன் ரிலீஸ் உரிமையை வாங்கியுள்ள அமேசான் நிறுவனம் நேற்று படத்தை ரசிகர்கள் எதிர்ப்புகளை மீறி அமேசான் பிரைம் தளத்தில் வெளியிட்டது.

இந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த, சினிமா பைரசி இணையதளமான தமிழ்ராக்கர்ஸ் விஸ்வாசம் படத்தின் ஹெச்.டி பிரிண்ட்டை அமேசான் தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, தங்களது வெப்சைட்டில் ஏற்றி விட்டது.

அமேசானுக்கு காசு கொடுத்து பார்க்க விரும்பாத தமிழ்ராக்கர்ஸ் ரசிகர்கள் ஒரே நாளில் லட்சக் கணக்கில் விஸ்வாசம் ஹெ.ச்டி. பிரிண்டை டவுன்லோடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version