சினிமா செய்திகள்

விஸ்வாசம் படத்தின் கண்ணான கண்ணே லிரிக் வீடியோ ரிலீஸ்!

Published

on

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் கண்ணான கண்ணே தாலாட்டு பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். வரும் பொங்கலுக்கு பேட்ட படத்துடன் போட்டிக்கு தயாராகியுள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

அடாவடி தூக்குதுரையாக நடித்துள்ள அஜித் தனது குழந்தையை அழகாக தாலாட்டி தூங்க வைக்கும் பாடல் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

தாமரையின் வரிகளில் சித் ஸ்ரீராம் பாடியுள்ள இப்பாடலை இமான் இசையமைத்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version