சினிமா செய்திகள்

சென்சார் செய்யப்பட்ட விஸ்வரூபம் 2.. சோகத்தில் படக் குழு..!

Published

on

விஸ்வரூபம் திரைப்படத்தின் முதல் பாகம் 2013-ம் ஆண்டு வெளியான போது இரண்டாம் பாகத்திற்கான பல காட்சிகள் எடுக்கப்பட்டு இருந்த நிலையில் இரண்டாம் பாகம் வெளிவர 5 வருடங்கள் தேவைப்பட்டுள்ளது.

கமல் நடிப்பில் விஸ்வரூபம் திரைப்பட முதல் பாகம் வெளியான போது பல சர்ச்சைகள் கிளம்பிய நிலையில் இரண்டாம் பாகம் வெளியாகும் முன்பு என்னவெல்லாம் சர்ச்சைகள் வரும் என்று தெரியவில்லை.

அது மட்டும் இல்லாமல் மர்மயோகி திரைப்படத்தில் நடிப்பதாகக் கூறிவிட்டுப் பாதியில் கமல் வெளியேறியதால் தங்களுக்கு நட்டம் ஆன தொகையினைச் செலுத்திய பிறகு விஸ்வரூபம் திரைப்படத்தினை வெளியிட அனுமதிக்கலாம் என்று பிரமிட் சாய்மீரா தரப்பில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. எனவே 18 வயதுக்குட்பட்டோர் பெற்றோர்களுடன் தான் படத்தினைப் பார்க்க அனுமதிக்கப்படும் என்பதால் திரைப்படக் குழு சோதத்தில் உள்ளது.

ஆனால் இந்திய திரை அரங்குகளில் இந்த வயது விதி அந்த அளவிற்குப் பின்பற்றப்படுவதில்லை என்பதும் முக்கியமானது. விஸ்வரூபம் 2ம் பாகம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஆகஸ்ட் 10-ம் தேதி வஎளியாக வாய்ப்புள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version