சினிமா செய்திகள்

கடனில் தவிக்கும் ‘காடன்’ திரைப்படம்: திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா?

Published

on

விஷ்ணு விஷால் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘காடன்’, இந்த திரைப்படம் வரும் 26ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீசுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு கடன் இருப்பதாகவும் எனவே இந்த படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆவது சந்தேகம் என்றும் ஒரு சிலர் வதந்தியை கிளப்பி வருகின்றனர்,

‘காடன்’ படத்தின் இயக்குனர் பிரபு சாலமன் தனிப்பட்ட முறையில் வாங்கியிருந்த கடன் தற்போது படத்திற்கு வில்லங்கமாக வந்திருப்பதாகவும் அதேபோல் இந்த படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்தின் முந்தைய படமொன்றில் நஷ்டத்தால் படத்தை நிறுத்த முயற்சிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது,

ஆனால் இதில் எந்த தகவலும் உண்மை இல்லை என்றும் ‘காடன்’ திரைப்படத்திற்கு இதுவரை எந்த பிரச்சனையும் வரவில்லை என்றும் படம் திட்டமிட்டபடி ரிலீஸாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்,

‘காடன்’ படத்திற்கு பாசிடிவ் விமர்சனம் தர ஒரு சிலர் பணம் கேட்டதாகவும் அந்த பணத்தை தயாரிப்பு தரப்பு கொடுக்க மறுத்ததால் வேண்டுமென்றே வதந்தியை பரப்பி வருவதாகவும் கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

Trending

Exit mobile version