சினிமா செய்திகள்

விஷ்ணுவிஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’ சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published

on

தமிழ் திரையுலகில் ’வெண்ணிலா கபடி குழு’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, ஜீவா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் தற்போது சிலுக்குவார் பட்டி சிங்கம், ‘எஃப்.ஐ.ஆர்’, ஆரண்யா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தின் புதிய அப்டேட் ஒன்றை நடிகர் விஷ்ணு விஷால் சற்றுமுன் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் சிங்கிள் பாடலை ஜூலை 17-ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் இந்த பாடல் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தை அவரே தயாரித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் ரெபா மோனிகா ஜான், மஞ்சிமா மோகன் ஆகிய இரண்டு நாயகிகளும் முக்கிய வேடத்தில் இயக்குனர்கள் கௌதம் மேனன் மற்றும் கௌரவ் நாராயணன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பிக் பாஸ் ரைசா இந்த படத்தில் ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்வத் இசையமைப்பில் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவில் பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை மனு ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார் என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version