சினிமா செய்திகள்
விஷ்ணுவிஷால் இரண்டாவது திருமணம் குறித்த தகவல்!
பிரபல நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கடந்த 2010ஆம் ஆண்டு ரஜினிநட்ராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது. இருவரும் கல்லூரி கால தோழர்கள் என்பதும் பல ஆண்டுகாலம் காதலித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு ஆர்யன் என்ற மகன் பிறந்தார்.
இந்த நிலையில் விஷால் விஷால் மற்றும் ரஜினி நடராஜ் ஆகிய இருவருக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் பேசி 2018 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா என்பவரை விஷ்ணு விஷால் காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் செய்திகள் வெளியானது. இந்த செய்திகளை விஷ்ணு விஷால் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேட்மின்டன் விளையாட்டு வீராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்யப்போவதாகவும் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் விஷ்ணுவிஷால் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து விஷ்ணு விஷால், ஜூவாலா கட்டா திருமணம் செய்து கொள்ளப் போவது உறுதி செய்யப்பட்டுள்ளது
விஷ்ணு விஷால் நடித்த காடன் திரைப்படம் மார்ச் 26ம் தேதி வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.