சினிமா செய்திகள்

8 வருஷமா ரிலீஸாகாத விஷால் படத்துக்கு அடிச்ச லக்கு; ‘மதகதராஜா’ இஸ் கம்மிங்!

Published

on

நடிகரும் தயாரிப்பாளருமான விஷால், தன் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சினிமா தயாரிப்பு மூலம் சொந்த நடிப்பில் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களை உருவாக்கி வெளியிட்டு வருகிறார். ஆனால் அவருக்கு கடைசி சில ஆண்டுகளாக எந்தப் படமும் கை கொடுக்கவில்லை. குறிப்பாக சில வாரங்களுக்கு முன்னர் திரையரங்குகளில் வெளியான ‘சக்ரா’ திரைப்படமும் மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் அவர் 8 ஆண்டுகளுக்கு முன்னர் நடித்த ‘மதகதராஜா’ என்னும் படம் தற்போது வெளியாகப் போவதாக தகவல்கள் வந்துள்ளன.

விஷால் நடிப்பில் உருவான படம் மதகஜராஜா. சுந்தர்.சி இயக்கிய இப்படம் கடந்த 2013-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்டது. இருப்பினும் பண பிரச்சினையால் இப்படம் ரிலீசாகாமல் முடங்கியே உள்ளது. இப்படத்தை வெளியிட விஷால் தரப்பிலும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால், எதுவும் பலனளிக்காததால், இப்படம் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. அதன்படி இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதகஜராஜா படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். சந்தானம் நகைச்சுவை கதாபாத்திரத்திலும், சோனு சூட் வில்லனாகவும் நடித்துள்ளார். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். 

Trending

Exit mobile version