தமிழ்நாடு

அதிமுகவை சீண்டிப்பார்க்கும் விஷாலின் அரசியல் அதிரடி டுவீட்!

Published

on

அதிமுக தற்போது எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தங்களுக்கு ஆதரவாக புதிய செய்தி சேனலை நியூஸ் ஜெ என்ற பெயரில் தொடங்கியுள்ளனர். இந்த சேனலின் ஒளிபரப்பு தற்போது தொடங்கியுள்ளது. இதனை ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடங்கி வைத்தனர்.

இதனை மறைமுகமாக சாடும் விதமாக நடிகர் விஷால் தற்போது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது தமிழக அரசியலிலும் , சினிமா வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்படுகிறது. நடிகர் விஷால் சினிமாவில் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என அனைத்திலும் வெற்றியே கண்டு வருகிறார். ஆனால் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் களமிறங்கிய விஷால் கடைசி நேரக் குளறுபடியால் போட்டியிடாமலேயே வெளியேறினார்.

இதனையடுத்து விஷாலுக்கும் அதிமுகவினருக்கும் இடையே மறைமுக பனிப்போர் நிலவுவதாக பேசப்படுகிறது. இந்நிலையில் அதிமுக நியூஸ் சேனலாக நியூஸ் ஜெ தனது ஒளிபரப்பை தொடங்கியுள்ளதை விஷால் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

விஷால் தனது டுவிட்டரில், மற்றுமொரு செய்திச் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு செய்தி சேனல் ஆரம்பிக்க நிறைய செலவாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் மாதச் சம்பளம் வாங்கும் எம்எல்ஏ, எம்பிக்கள் எப்படி இதுபோன்ற ஒரு வியாபார அமைப்பைத் தொடங்க முடிகிறது? 2019ஆம் ஆண்டுக்காகக் காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார். இது புதிய நியூஸ் சேனலை தொடங்கியுள்ள அதிமுகவை சாடும் மறைமுகமாகவே விதமாகவே உள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version