சினிமா செய்திகள்
எதிர்பாராத அளவுக்கு ஒரே நாளில் வசூலை குவித்த ஆக்ஷன்!
![Vishal Tamanna - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/11/Vishal-Tamanna.jpg)
விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கிய திரைப்படம் ஆக்ஷன். இந்த திரைப்படத்துடன் நேற்று சங்கத்தமிழன் திரைப்படமும் வெளியாக இருந்தது.
ஆனால் சில நிதி சிக்கலால் சங்கத்தமிழன் நேற்று மாலை தான் வெளியானது. எனவே நேற்று காலை முதல் மாலை வரை ஆக்ஷன் படத்திற்கு அதிக திரை அரங்குகளும் கிடைத்தன.
இதனால் ஆக்ஷன் திரைப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்ற போதிலும் சிங்களாக நேற்று மாலை வரை திரை அரங்குகளில் தனித்து இருந்ததால் எதிர்பாராத அளவுக்கு அதிகமான வசூலை பெற்றுள்ளது.
சென்னையில் மட்டும் ஆக்ஷன் திரைப்படம் 34 லட்சம் ரூபாய் வசூலித்து, உலகளவில் 3.5 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. நேற்று மாலை முதல் சங்கத்தமிழன் வெளியானதால் இன்று ஆக்ஷன் திரைப்படத்தின் வசூல் கண்டிப்பாக பாதிப்படையும் என்று கூறப்படுகிறது.