சினிமா செய்திகள்

ஐதராபாத்தில் நடந்த விஷால் – அனிஷா நிச்சயதார்த்தம்!

Published

on

நடிகர் விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் உள்ள சொகுசு ஓட்டலில் இன்று மதியம் கோலாகலமாக நடைபெற்றது.

நடிகர், தயாரிப்பாளர் என சினிமா உலகில் பன்முகத்தன்மையோடு விளங்கும் நடிகர் விஷால் மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் மகள் அனிஷாவுக்கும் இடையே காதல் உருவாகி அது, பெரியவர்களின் சம்மதம் பெற்று, தற்போது திருமணம் நடைபெற நிலைக்கு வந்துள்ளது.

நடிகை வரலட்சுமியுடன் விஷால் திருமணம் செய்து கொள்ளப்போவதாக எழுந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சில வாரங்களுக்கு முன்னால், விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அனிஷாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு திருமணத்தை உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில், விஷால்-அனிஷா நிச்சயதார்த்தம் இன்று ஐதராபாத்தில் உள்ள சொகுசு ஓட்டலில் பகல் 12 மணிக்கு நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version