சினிமா செய்திகள்

விஷால்-ஆர்யாவின் ‘எனிமி’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published

on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் நடித்து வரும் ‘எனிமி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி குறித்த விபரம் சற்று முன் வெளியாகி உள்ளது.

விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள ‘எனிமி’ திரைப்படத்தை இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே அரிமா நம்பி, இருமுகன் மற்றும் நோட்டா ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஆனந்த் சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் விஷால் ஆர்யா இருக்கும் அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார் என்பதும் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் ஜோடியாக மிருணாளினி நடித்துள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார் என்பதும் பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ் உள்பட பலர் இந்த படத்தில் நடித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ். தமன் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை வினோத் குமார் என்பவர் தயாரித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version