சினிமா செய்திகள்

விஷால்-ஆர்யாவின் ‘எனிமி’ ரிலீஸ் தேதி இதுதான்!

Published

on

’அவன் இவன்’ படத்திற்கு பின்னர் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த திரைப்படம் ‘எனிமி’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் தெரிந்ததே. மேலும் இன்று முதல் இந்த படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பமாகவுள்ளன என்பதும் ஏற்கனவே கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ‘எனிமி’ திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று காலையிலேயே அறிவித்திருந்தார். இதனை அடுத்து விஷால் மற்றும் ஆர்யா ரசிகர்கள் ‘எனிமி’ அப்டேட்டை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில் சற்று முன் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘எனிமி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ‘எனிமி’ திரைப்படம் வரும் ஆயுத பூஜை தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து விஷால் மற்றும் ஆர்யாவின் ரசிகர்கள் குஷியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஆயுத பூஜை தினத்தில் வேறு சில திரைப் படங்கள் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஷால் தனது ‘எனிமி’ பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.,

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ள இந்த படத்தில் விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, கருணாகரன் உள்பட பல நடித்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் எஸ் வினோத்குமார் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version