சினிமா செய்திகள்

’விஷால் 31’ டைட்டில் பர்ஸ்ட்லுக் ரிலீஸ்!

Published

on

நடிகர் விஷால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் நடித்து வரும் படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விஷால் நடிப்பில் து.பா சரவணன் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விஷால் 31’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்திற்கு ’வீரமே வாகை சூடும்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு, பர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் உள்ளது போல் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பதும் கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார் என்பதும் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு பணி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.

விஷால் ஏற்கனவே நடித்து முடித்துள்ள ’எனிமி’ திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் விரைவில் அவர் நடித்து வரும் இன்னொரு திரைப்படமான ’துப்பறிவாளன் 2’ என்ற படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version