தமிழ்நாடு

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் விருதுநகரின் சிங்கப்பெண்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Published

on

உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது என்பது எளிதான ஒன்றல்ல. இருப்பினும், அதனை முயற்சிக்கும் தமிழ்நாட்டின் சிங்கப்பெண் முத்தமிழ்ச்செல்விக்கு நமது பூமி டுடே டிஜிட்டல் மீடியா சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழ்நாட்டுப் பெண்

தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியைச் சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வி. இவர் தற்போது கடின இலக்கான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிக் கொண்டிருக்கிறார். இவருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், தொலைபேசியின் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முதல்வர் வாழ்த்து 

அனைவருக்கும் சாதனைப் படைத்து, தாங்களே ‘முதல்’ என்று முத்திரைப் பதித்திட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்கான உழைப்பும், முயற்சியும் இருந்தால் எத்தகைய உயரத்தையும் அடைந்து விடலாம் என்பதற்கு உதாரணமாக, புகழின் உச்சத்திற்குச் செல்ல, உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிக் கொண்டிருக்கிறார் விருதுநகர் மாவட்டத்தின் ஜோகில்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி எனும் சிங்கப்பெண்.

மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் தமிழ்ப் பெண் எனும் சாதனையை நோக்கி, 7,200 மீட்டர் உயரத்தைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கும் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தொலைபேசியின் வாயிலாகப் பகிர்ந்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. எட்டி விடும் தொலைவில் இருக்கும் சாதனை அவருக்கு வசப்படட்டும்! இன்னும் பல பெண்கள் சாதனைப் படைத்திட இவர் ஊக்கமாக விளங்கட்டும் என முதல்வர் முக ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version