கிரிக்கெட்

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்: விராத்கோஹ்லி அறிவிப்பு!

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி விரைவில் கேப்டன் பதவியில் இருந்து விலகுவார் என்றும் அவர் தனது பேட்டிங்கில் முழுமையாக கவனம் செலுத்துவார் என்றும் செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்தியை இந்திய கிரிக்கெட் போர்டு மறுத்தது. கேப்டன் பதவியிலிருந்து விராட் கோஹ்லி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் விராத் கோஹ்லி திடீரென தனது சமூக வலைதளப் பக்கத்தில் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும்தான் கவனம் செலுத்த உள்ளதாகவும் இந்த முடிவை தான் நீண்ட ஆலோசனைக்குப் பின்னரே எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இந்திய அணிக்காக விளையாடுவது மட்டுமின்றி இந்திய அணியின் கேப்டனாக வழிநடத்திச் சென்றது தனக்கு மகிழ்ச்சி என்றும் இந்திய அணியின் கேப்டனாக நான் பொறுப்பு வகிக்க உதவிய அனைவருக்கும் தனது நன்றியை என்றும், குறிப்பாக எனது உதவியாளர்கள், தேர்வாளர்கள், பயிற்சியாளர்கள் என ஒவ்வொருவரின் உதவி இல்லாமல் என்னால் இந்த சாதனையை எட்டி இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விராத் கோஹ்லியின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தான் கேப்டனாக செயல்பட இருப்பதாகவும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த பிறகு டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் விராட் கோஹ்லி எடுத்திருக்கும் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விராத் கோஹ்லியை அடுத்து ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் தொடரின் கேப்டனாக பதவி வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version