கிரிக்கெட்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: தொடர்ந்து பின்தங்கி வரும் விராட் கோலி!

Published

on

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து பின் தங்கி வருகிறார்.

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 4-ம் இடத்தில் இருந்த கேப்டன் விராட் கோலியை இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பின்னுக்குத் தள்ளி உள்ளார். இதன் மூலம் விராட் கோலி 5-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். அடுத்தடுத்து ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் 6-ம் மற்றும் 7-ம் இடங்களில் உள்ளனர்.

இதேபோல், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் அஸ்வின் ரவிச்சந்திரன் தொடர்ந்து தனது 2-ம் இடத்தைத் தக்க வைத்து வருகிறார். பும்ரா 19-வது இடத்தில் 9-ம் இடத்துக்கு வந்துள்ளார். இதே பும்ரா தான் கடந்த செப்டம்பர் 2019-ம் ஆண்டு சர்வதேச தரவரிசைப் பட்டியலில் 3-ம் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version