கிரிக்கெட்

பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார் விராத்: உருக்கமான வீடியோ!

Published

on

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்திருந்த நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாக விராட் கோலியின் பேட்டிங் சுமாராக இருந்து வருவதாகவும் அவரது ரன்ரேட் படிப்படியாக குறைந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை அடுத்து அணி நிர்வாகிகள் விராட் கோலி மீது தங்களது அதிருப்தியை தெரிவித்ததாகக் கூறப்பட்டது. இதனால் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக விராட் கோலி முடிவு செய்தார்.

வரும் உலகக் கோப்பை டி20 போட்டிக்கு பின்னர் டி20 அணியிலிருந்து கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாகவும் ஒரு பேட்ஸ்மேனாக தொடர்வேன் என்றும் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டனாக அவர் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திடீரென ஐபிஎல் பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராத் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் என்னால் முடிந்த பங்களிப்பை அளித்து உள்ளேன். அதில் ஆறு ஆண்டுகள் கேப்டனாகவும் இருந்துள்ளேன். இந்த நிலையில் வேலைப்பளு அதிகம் என்பதால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு மட்டும் கேப்டனாக தொடர முடிவு செய்துள்ளேன்.

டி20 தலைவராக தலைவர் பதவியிலிருந்து நான் விலக முடிவு செய்துள்ளேன். இருப்பினும் டி20 அணியின் தலைவராக இருந்தபோது அணிக்காக என்னால் முடிந்த அனைத்து திறமை வெளிப்படுத்தினேன். இந்த நிலையில் துபாயில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின்னர் பதவி விலகவுள்ளேன். இருப்பினும் ஒரு பேட்ஸ்மேனாக டி20 அணியில் தொடர்வேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த ஆண்டுடன் பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக இருப்பதாகவும் அடுத்த ஆண்டு முதல் பெங்களூர் அணியில் பேட்ஸ்மேனாக தொடர்வேன் என்றும் ஐபிஎல் போட்டியில் விளையாடும் வரை கடைசிவரை பெங்களூர் அணிக்காக விளையாடுவேன் என்றும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். அவரது இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகினால் அனேகமாக டிவில்லியர்ஸ் கேப்டனாக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version